search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா"

    மாங்கனித் திருவிழாவில் காரைக்கால் அம்மையாருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
    காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா நேற்று முன்தினம் இரவு மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

    விழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை 11 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக, தீர்த்தகரைக்கு அம்மையாரும், குதிரை வாகனத்தில் பரமதத்த செட்டியாரும் வந்தனர்.

    விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன், அசனா எம்.எல்.ஏ., கலெக்டர் கேசவன், கோவில் நிர்வாக அதிகாரி, விக்ராந்த் ராஜா, அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் திரளான பக்தர்கள் திருக்கல்யாணத்தை தரிசித்தனர்.தொடர்ந்து, இரவு 10 மணிக்கு காரைக்கால் அம்மையாரும், பரமதத்த செட்டியாரும் முத்துச் சிவிகையில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


    திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள்.

    திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக, இன்று (புதன்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகாஅபிஷேகம், தீபாராதனை, காலை 7 மணிக்கு பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் வீதிஉலா நடக்கிறது. வீதிஉலாவின்போது மாங்கனிகளை பக்தர்கள் வாரி இறைத்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள்.

    பின்னர் இரவு 7 மணிக்கு காரைக்கால் அம்மையார் பிச்சாண்டவருக்கு அமுது படைத்தல், இரவு 9 மணிக்கு சித்திவிநாயகர் கோவிலில் பரமதத்தருக்கு 2-வது திருமணம், நள்ளிரவு 11 மணிக்கு புனிதவதியார் புஷ்ப பல்லக்கு வீதிஉலா நடக்கிறது. இதனை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) அதிகாலை, அம்மையாருக்கு இறைவன் காட்சி தருகிறார். 
    கன்னியாகுமரியில் உள்ள குகநாதீஸ்வரர் திருக்கோவிலிலும் ஆனி மாத பவுர்ணமி நன்னாளின் இரவில் ‘காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா’ ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது.
    காரைக்காலைப் போன்றே கன்னியாகுமரியில் உள்ள மிகவும் பழமையான பார்வதி அம்மன் சமேத குகநாதீஸ்வரர் திருக்கோவிலிலும் ஆனி மாத பவுர்ணமி நன்னாளின் இரவில் ‘காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா’ ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது.

    இங்கு குகநாதீஸ்வரர் பிச்சாண்டவர் கோலத்தில் சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தை வலம் வர, பின்னர் காரைக்கால் அம்மையார் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தட்டு வாகனத்தில் எழுந்தருளி வலம்வர அதுசமயம் பக்தர்கள் மாங்கனி படைத்தும், இறைத்தும் வழிபட்டு ஈசனின் இன்னருள் பெறுகிறார்கள். 
    காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூரும் வகையில் நடத்தப்படும் மாங்கனித் திருவிழா இந்த ஆண்டு மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.
    காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா நேற்று மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் பரமதத்த செட்டியார் மேளதாளம் முழங்க இரவு 8 மணியளவில் கோவிலுக்கு அழைத்துவரப்பட்டார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு பரமதத்தர் செட்டியாருக்கும், புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாணம், மாலை பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடு, இரவு புனிதவதியாரும் - பரமதத்த செட்டியாரும் தம்பதிகளாக முத்துச்சிவிகையில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    நாளை (புதன்கிழமை) அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவருக்கு மகா அபிஷேகமும், காலை 7 மணிக்கு சிவபெருமான் சிவனடியார் கோலத்தில் பவளக்கால் விமானத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அப்போது, பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர்.

    அன்று மாலை 6 மணிக்கு அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து இரவு 11 மணிக்கு அம்மையார் புஷ்ப சிவிகையில் எழுந்தருளி, சித்திவிநாயகர் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந் தேதி காலை அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    மாங்கனித் திருவிழாவையொட்டி காரைக்காலில் கடைகளில் விற்பனைக்காக மாங்கனிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. 
    காரைக்கால் அம்மையார் கோவிலில் இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா இன்று (திங்கட்கிழமை) மாலை மாப்பிளை அழைப்புடன் தொடங்குகிறது.
    இறைவனின் திருவாயால் ‘அம்மையே‘ என்றழைக்கப்பட்ட பெருமை மிக்கவர் காரைக்கால் அம்மையார். இவர் காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில்கொண்டு அருள்பாலித்து வருகிறார். அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு, ஆண்டுதோறும், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா இன்று (திங்கட்கிழமை) மாலை மாப்பிளை அழைப்புடன் தொடங்குகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு ஸ்ரீ பரமதத்தர் செட்டியாருக்கும், ஸ்ரீ புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறகிறது.

    27-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவர் மூர்த்திக்கு மகா அபிஷேகமும், காலை 7 மணிக்கு சிவபெருமான் சிவனடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அந்த சமயத்தில் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றும் பொருட்டு, மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 
    ×